

திருப்பத்தூரில் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டை திருடிய நபர் கைது
திருப்பத்தூர் ஆரிப் நகர் பகுதியை சேர்ந்தவர் பையாஸ் (48) இவர் மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் வழக்கம் போல வீட்டின் அருகே தனது பசு மாட்டை கட்டி வைத்திருந்தார். இந்த நிலையில் திடீரென அதில் ஒரு பசுமாடு காணாமல் போனது. இதனை அறிந்த பையாஸ் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் தனது மாட்டை காணவில்லை என புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் நகர போலீசார் பொன்னியம்மன் கோவில் தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சந்தேகத்திற்குரிய வகையில் நபர் ஒருவர் பசுமாட்டை அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிவராஜ் பேட்டை பகுதியை சேர்ந்த பிரசாந்த் (30) என்பவர் பையாஸ் வீட்டில் மாடு திருடியதை ஒப்புக்கொண்டார். அதன் காரணமாக திருப்பத்தூர் நகர போலீசார் பிரசாந்த் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பசுமாட்டை பறிமுதல் செய்தனர்.