தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "தமிழகத்தில் உள்துறை அமைச்சர் சரியில்லை, அந்த துறைக்கு ‘அப்பா’ தான் அமைச்சர். 200 ரூபாய் கொடுத்து டுவீட் போட சொல்வது, 'அப்பா' என சொல்வது போன்ற செட்டிங்லாம் எங்களுக்கு தெரியாது. திமுகவினருக்கு அரசியல் அறிவு கிடையாது. அவர்களை பாயசம் என சொல்லக்கூடாது, நாசிசம் என சொல்லனும்” என்றார்.