தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “பேரவை உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். டிவி-யை பார்த்துதான் தெரிந்துகொண்டோம் என கூறமாட்டோம்” என்றார். உடனே எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி கொந்தளித்தபடி, “அதையே திரும்ப திரும்ப ஏன் பேசுறீங்க?” என்றார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட கலவரங்கள், இந்த ஆட்சியில் ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் பொது அமைதி நிலவுகிறது" என்றார்.