தமிழக சட்டப்பேரவையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “எல்லோரும் பேப்பரில் எழுதும்போது ‘உ’ போட்டு எழுதுவார்கள். அதேபோல், நமது முதலமைச்சர் ‘ரூ’ போட்டு இந்த பட்ஜெட்டை ஆரம்பித்துள்ளார். பாசிஸ்ட்டுகள் எத்தனை ரூல்ஸ் போட்டு தமிழகத்தை அடக்க நினைத்தாலும், பட்ஜெட்டில் ஒரே ஒரு ‘ரூ’ போட்டு அவர்களை அலறச் செய்தவர் முதலமைச்சர். நம்ம தலைவர் இருக்கும் வரை தமிழ்நாட்டுக்குள்ள இந்தி திணிப்பு அல்ல எந்த திணிப்பும் யாராலும் கொண்டுவர முடியாது” என்றார்.