கேவி குப்பம் - Kevi Kuppam

கே வி குப்பத்தில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருந்து குடியாத்தம் நோக்கி தினமும் 25க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கே வி குப்பம் வழியாக செல்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் காட்பாடியில் இருந்து குடியாத்தம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது அப்பொழுது கே வி குப்பம் அடுத்த விக்ரமாசி மேடு பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது மர்ம ஆசாமிகள் யாரோ பைக்கில் வந்தபடி அரசு பேருந்து மீது கற்களை வீசி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் பேருந்தை உடனே நிறுத்தினார். தொடர்ந்து கண்டக்டர் கீழே இறங்கி சென்று பார்ப்பதற்குள் மர்ம ஆசாமிகள் தப்பி சென்றனர். பேருந்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து போனது அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்தவித காயமும் இல்லை. இது தொடர்பாக லத்தேரி காவல் நிலையத்தில் டிரைவர் பாபு அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా