கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாம்பல்பட்டி தரைப்பாலத்தில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் பலத்த காயம் அடைந்த பயணிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.