ஆம்பூர் - Ambur

ஆம்பூர் அருகே அமோகமாக நடைபெற்று வரும் கள்ளச்சாராய விற்பனை.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மணியார்குப்பம், தென்னம்பட்டு, மோட்டூர் ஆகிய பகுதிகளில் தென்னந்தோப்பு ஏரிக்கரை பகுதிகளில் மணியார்குப்பம் பகுதியை சேர்ந்த சரத் மற்றும் தசரத விஜயன் ஆகியோர் மூலம் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் இருசக்கர வாகனத்திலும் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், கள்ளசாராய பிரியர்களிடம் பணம் கையில் இல்லை என்றாலும், கூகுள் பே மூலமும் பணம் அனுப்பி ஒரு பாக்கெட் 50 ரூபாய் வீதம் பெற்று கொள்ளலாம் என பல வகையில் சாராய வியாபாரிகள் கள்ளத்தனமாக அமோகமாக விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் சில காவல்துறையினர் கண்டும் காணாமல் கள்ளச்சாராய விற்பனைக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా