மியான்மரில் இன்று மார்ச்.28 காலை இரண்டு முறை 7.7 மற்றும் 7.8 ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்திலும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இயற்கையின் இப்பேரழிவில் பல குடியிருப்பு கட்டிடங்களும், மனித கட்டுமானங்களும் இடிந்து தரைமட்டமாகின. இப்பேரிடரில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து தகவல் வெளிவராத நிலையில், இயற்கையின் கோர தாண்டவத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளன.