மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர், தாராகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் அனில் பால். கடந்த 2016ல் ரஜினி பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கள்ளக்காதல் வயப்பட்ட ரஜினி பால், சம்பவத்தன்று அம்மா வீட்டுக்கு செல்வதாக புறப்பட்டார். மனைவியை மறைமுகமாக கண்காணித்த அனில், உண்மையை கண்டறிந்துள்ளார். இதனால் ரஜினி பால் கணவரின் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்துள்ளார். பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.