ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், “எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் போலவா நான்?. நான் ஒரு சாதாரண விவசாயி மகன், ஒரு ரூபாய் காசு கொடுக்காமல் மக்கள் கூடியிருப்பது இந்த மகன் நமக்காக பேசுவான் என்ற நம்பிக்கையில் தான். இவன் எனக்கானவன் என்ற ஒற்றை நம்பிக்கையில் வந்து என மக்கள் நிற்கின்றனர்” என்றார்.