குதிரையேற்றம் போட்டி.. வெற்றி பெற்றோருக்கு உதயநிதி வாழ்த்து

83பார்த்தது
குதிரையேற்றம் போட்டி.. வெற்றி பெற்றோருக்கு உதயநிதி வாழ்த்து
சென்னை: பெங்களூருவில் நடைபெற்ற உலக குதிரையேற்ற போட்டியில் வென்ற வீரர்கள், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இதுகுறித்து உதயநிதி தனது ‘X’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “குதிரையேற்ற போட்டியில், வீராங்கனை மிராயா தாதாபோய் தங்கப் பதக்கம் வென்று, உலக குதிரையேற்ற தரவரிசையில் 5ஆம் இடம் பிடித்தது தமிழ்நாட்டிற்கு பெருமை. ஆசியாவின் 'BEST YOUTH RIDER' பதக்கத்தையும் வென்று மிராயா தாதாபோய் சாதனை படைத்துள்ளார்” என்றார்.

தொடர்புடைய செய்தி