நடிகர் அஜித்குமாரை போலவே அவரின் மகன் ஆத்விக்கும் விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். ஆத்விக் அண்மையில் தனது பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சியை அஜித் மனைவி ஷாலினி தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் வைரலாகியுள்ளது. இதையடுத்து புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.