திருப்பத்தூர் மாவட்டம் கூத்தாண்டகுப்பம் கிராமத்தில் மாபெரும் எருது விடும் திருவிழா ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர், நாகர்கோயில், ஆலங்காயம், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர், மிட்டூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
காளைகள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குறுகிய நேரத்தில் சென்றடைந்த காளையின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் பிளஸ் இருசக்கர வாகனமும், இரண்டாவது பரிசு ஹீரோ ஹோண்டா சிடி டீலக்ஸ் இருசக்கர வாகனம், மூன்றாவது பரிசாக டிவிஎஸ் சூப்பர் எக்ஸெல் ஹெவி டூட்டி இருசக்கர வாகனமும் மற்றும் எல்இடி டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட 63 பரிசுகள் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன.
மேலும் எருது விடும் விழாவில் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க பாதுகாப்பு பணிக்காக 150-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் எருது விடும் திருவிழா காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இது திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல் முறையாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து நடைபெற்றது.