கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த லாரியை பேருந்து முந்தி செல்ல முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.