கோவை: மேட்டுப்பாளையத்தில் குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பை மீறி வர்ஷினி பிரியுாவை, கனகராஜ் என்பவர் திருமணம் செய்துகொண்டார். ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதி 2019ஆம் ஆண்டு ஆணவக்கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கனகராஜ் சகோதரர் வினோத்குமார் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் இன்று (ஜன.29) தண்டனை அறிவிப்பக்கட்டது. அதன்படி, அரிதினும் அரிதான வழக்கு என்பதால் மரண தண்டனை விதிப்பதாக கோவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் தீர்ப்பு வழங்கினார்.