முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி அஹ்லாவத் ஆகியோர் 20 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிய உள்ளதாக சில நாட்களாக தகவல் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் சேவாக் மற்றும் ஆர்த்தி காரில் இருக்கும் போது வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.