கீ. வ. குப்பம் வட்டம், கொசவன்புதூர் கிராமத்தில் இன்று (29.01.2025) நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, 174 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 57 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இம்முகாமில் கீ.வ.குப்பம் ஒன்றியக் குழுத்தலைவர் ரவிசந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சீதாராமன், முருகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி, மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், கொசவன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் புவனேஸ்வரி சந்திரசேகரன், கீ.வ.குப்பம் வட்டாட்சியர் சந்தோஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.