ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இந்த நிலையில், ஐசிசி தலைமை செயல் அதிகாரி ஜெப் அலார்டிஸ் தனது பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “என்னால் முடிந்தவரை இந்த பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டுள்ளேன். ஓய்வு பெறுவதற்கு இதுதான் சரியான நேரமாக இருக்கும் என்று கருதுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.