வேலூரை சேர்ந்த சுபா என்பவரின் கணவர், கோவையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இருந்து குழந்தைகளுக்கு Chocos உணவு வாங்கினார். அதை உண்ட குழந்தைகள் உள்ளே புழு நெளிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உணவு பொருள் காலாவதியாக இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.