அரசியலில் அவ்வப்போது கௌரவத் தோற்றம் போல் வருகிறார் தவெக தலைவர் விஜய் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், "திடீரென்று விஜய் வந்தார். பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என கூறினார். விமான நிலையம் வேண்டாம் என கூறியவர் எங்கு அமைக்க வேண்டும் என சொல்லவில்லை. அரசியலில் கேமியோ ரோல் போல் வந்து போகிறார்" என்று பேட்டியளித்துள்ளார்.