வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரி 79வது பட்டமளிப்பு விழா..

63பார்த்தது
வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரி 79வது பட்டமளிப்பு விழா..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமியாக் கல்லூரியின் 79வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள அல்லாமா இக்பால் கலையரங்கில் நேற்று காலை நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி செயலாளரும் மற்றும் தாளாளருமான எல். எம். முனீர் அஹமத் தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தார். கல்லூரி துறைத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் டி. அப்சர் பாஷா அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். 

விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்கா நாடு ஆக்ஸிலோர் குரூப் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ, அக்ரம் சையத் எம்.எஸ் கலந்து கொண்டு 325 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினர். விழாவில் வாணியம்பாடி முஸ்லீம் கல்விசங்க பொதுச்செயலாளர் பி. அப்துல்லா பாஷா, துணைச்செயலாளர் நரி முஹம்மத் நயீம், துணைத்தலைவர் படேல் முஹம்மத் யூசுப், அறங்காவலர் உறுப்பினர் டாக்டர் இக்ராமுல்லா, செயற்குழு உறுப்பினர்கள் அமீர் பாஷா, டி. முஹம்மத் ரவுப் காலித், கொந்தாளம் அஷ்வாக், டாக்டர் எம். அப்துர் ரஹ்மான், பி. முஹம்மத் அகில், டி.கே. ரபீக் அஹமத், ஷகீல் அஹமத், இஸ்லாமிய ஐ.டி.ஐ செயலாளர் ஜாவித் இக்பால், டி. முஹம்மத் மகீன் உட்பட கல்விச்சங்க உறுப்பினர்கள், கல்லூரி துணை முதல்வர்கள் முனைவர் எஸ். காதர் நவாஸ், சையத் தாஹிர் உசைனி, தேர்வுத்துறை டீன் முனைவர் லியாகத் அலிகான் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி