கும்பமேளாவிற்கு சென்றபோது விபத்து - 4 பேர் பலி

53பார்த்தது
உ.பி: ரேபரேலியில் உள்ள முன்ஷிகஞ்ச் பைபாஸ் சாலையில் கார் மற்றும் டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். லக்னோவை சேர்ந்த குடும்பம் ஒன்று மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக சென்றபோது, விபத்து ஏற்பட்டுள்ளது. இக்கோர விபத்தில், 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி