மகளின் காதலனை கழுத்தை அறுத்த தந்தை.. மகள் தற்கொலை

64பார்த்தது
மகளின் காதலனை கழுத்தை அறுத்த தந்தை.. மகள் தற்கொலை
தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, 17 வயது சிறுவனை காதலித்து வந்துள்ளார். நேற்று (ஜன.28) காதலனை அச்சிறுமி தனது வீட்டிற்கு அழைத்ததாக தெரிகிறது. அப்போது, வீட்டிற்கு வந்த சிறுமியின் தந்தை, காதலனை பிடித்து கத்தியால் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்து பதறிய சிறுமி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், காயமடைந்த சிறுவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.