திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்புகுட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 83 பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக பள்ளி மாணவர்கள் திடீரென 30க்கும் மேற்பட்டோர் விடுமுறை எடுத்து வந்துள்ளனர். மேலும் புதன்கிழமையான இன்று மட்டும் 31 பேர் விடுமுறை எடுத்திருந்தனர்.
இதனை அறிந்த புதுப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய ஹெல்த் இன்ஸ்பெக்டர் பவித்ரன் மற்றும் கிஷோர் ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் விடுமுறை எடுத்து இருந்த பள்ளி மாணவர்களை பள்ளிக்கு அழைத்து அவரவருடைய ரத்த மாதிரியை சேகரித்து சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பினர்.
மேலும் முதற்கட்ட சோதனையில் பள்ளி மாணவர்களுக்கு கழுத்து மற்றும் முகத்தில் லேசான அம்மை அறிகுறிகள் தென்படுவதாகவும் அம்மையாக இருக்கலாம் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. மேலும் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் உள்ள தண்ணீர் மிகவும் அசுத்தமாக இருந்தது. அதனை அப்புறப்படுத்தினர்.