ஆட்டோ கட்டணம் பிப்ரவரி மாதம் முதல் உயரப்போவதாக சில தகவல்கள் பரவிவந்த நிலையில், அதுகுறித்து போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக எச்சரிக்கை ஒன்றையும் விடுத்திருக்கிறது. அதன்படி, போக்குவரத்து துறையின் சார்பில் புதிய கட்டண அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே அது அனைத்து ஆட்டோக்களுக்கும் பொருத்தமானதாகும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தன்னிச்சையாக கட்டணத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் உயர்த்த முடியாது என்று அறிவுறுத்தியுள்ளது.