BREAKING: கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலி

2940பார்த்தது
BREAKING: கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலி
உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 16-ந் தேதி முதல் மகா கும்பமேளா நிகழ்வு நடந்துவருகிறது. இந்நிலையில் இன்று(ஜன.29) மௌனி அமாவாசையையொட்டி திரிவேணி சங்கமத்தில் நீராட கோடிக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்தனர். அப்போது அதிகாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இச்சம்பவத்தில் காயமடைந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி