'பராசக்தி' என்ற தனது படத்தின் தலைப்பை கடந்தாண்டே பதிவு செய்துவிட்டதாக நடிகர் விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படத்தின் தலைப்பு 'பராசக்தி' என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அருண் பிரபு இயக்கும் படத்திற்கு தமிழில் 'சக்தித் திருமகன்' எனவும் தெலுங்கில் 'பராசக்தி' எனவும் ஏற்கனவே பெயரிடப்பட்டுள்ளதாக விஜய் ஆண்டனி விளக்கம் அளித்து, அதற்கான சான்றை வெளியிட்டுள்ளார்.