திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 36வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா சாலை பாதுகாப்பு கண்காட்சி பேருந்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் அந்த கண்காட்சி பேருந்தில் சாலை விதிமுறைகளை எவ்வாறு கடைபிடிப்பது, இருசக்கர வாகன ஓட்டுநர் சோதனை தளம், தலைக்கவசம் அணிவதன் குறித்து விழிப்புணர்வு உள்ளிட்ட பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. உடன் இந்த நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பன்னீர்செல்வம், வெங்கட் ராகவன், TNSTC மேலாளர் ராகவன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.