
காணாமல் போன நபரை தேடிய போலீஸ்.. வீட்டில் ஹாயாக தூங்கிய இளைஞர்
சென்னை நீலாங்கரை கடற்கரையில் லட்சுமணன் (22), சாய் விக்னேஷ் (23) ஆகிய இருவரும் மதுபோதையில் படுத்துக்கிடந்துள்ளனர். சாய் விக்னேஷ் எழுந்து பார்க்கும் போது லட்சுமணன் இல்லாததால், பதறிப்போன அவர் கடல் அலை இழுத்துச் சென்றதாக நினைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக மீட்புப்படையினர் கடலில் இறங்கி சுமார் 2 மணி நேரமாக தேடிவந்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், காணாமல் போன லட்சுமணன், வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தது தெரியவந்தது.