திரைத்துறையினர் நலன் கருதி 90 ஏக்கர் நிலத்தை மீண்டும் அவர்களுக்கே குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். சென்னையை அடுத்த பையனூரில் கடந்த 2010ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட வீட்டுமனைகளில் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் வீடுகள் கட்டாததால் மனைக்கான ஆணை ரத்தானது. திரைத்துறையினரின் கோரிக்கையை அடுத்து மனைகளை பயன்படுத்தும் வகையில் புதிய அரசாணை தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.