திருவாரூர்: நீடாமங்கலம் அருகே அரசு பஸ்ஸில் இருந்து பள்ளி மாணவி தவறி விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மகாலிங்கத்தின் மகள் சுகந்தி(13), முன்னவாழ்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மாணவி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.