உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கின்றன. அங்கு, உலகம் முழுவதிலுமிருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் சென்று புனித நீராடி வருகின்றனர். மகா கும்பமேளாவுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள் பயன்பெறுவதற்காக, திரிவேணி சங்கம் நீரை பல நிறுவனங்கள் ஆன்லைனில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளன. அதன்படி, 100ml பாட்டில் ரூ.200 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது.