சீனாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில், ரோபோட்டுகள் கொண்டுவரப்பட்டன. அதனை மக்கள் கண்டு ரசித்தனர். அப்போது, பொது வெளியில் AI ரோபோட் ஒன்று, கூட்டத்தில் நின்றிருந்த பெண்ணை தாக்கியது. இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக ரோபோட்டை உருவாக்கிய நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.