கடலூர் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "நீங்கள் எங்களிடம் வாங்கும் வரியை தரமுடியாது என்று சொல்ல எங்களுக்கு ஒரு நொடி போதும் மறந்துவிடாதீர்கள். கொடுத்து பெறுவதுதான் கூட்டாட்சி தத்துவம், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை, இது புரியாதவர்கள் மத்தியில் ஆள்வது சாபக்கேடு" என கடுமையாக விமர்சித்துள்ளார்.