தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்னும் இரண்டு மாதங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களையும், மக்களையும் சந்திக்க உள்ளார் என தவெகவின் பொருளாளார் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வெங்கட்ரமணன் இதனை தெரிவித்தார். 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிரடியான பல வியூகங்களை விஜய் வகுத்துள்ளார்.