மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் எதிர்த்து வரும் சூழலில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர் பகுதியில் உள்ள தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் இல்லம் முன்பு "தமிழ் வாழ்க இந்தி ஒழிக" என்ற வாசகத்தில் திமுக கொடி வண்ண கோலமிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதே பகுதியில் உள்ள அணைக்கட்டு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார் வீட்டின் முன்பு "தமிழ் வாழ்க; இந்தி ஒழிக" என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
இதே போல காட்பாடியில் உள்ள திமுகவினரின் வீடுகளுக்கு முன்பு மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோலமிட்டு இருந்தனர்.