பூஜை போட சென்ற புதிய ஆட்டோ விபத்து.. தூக்கி வீசப்பட்ட பெண்

60பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே புதிய ஆட்டோ விபத்துக்குள்ளான சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மாயகிருஷ்ணன் என்பவர் தான் புதியதாக வாங்கிய ஆட்டோவிற்கு, பூஜை போடுவதற்காக குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்குச் சென்றுள்ளார். அப்போது, எதிரே இருசக்கர வாகனம் வந்ததால், நிலைதடுமாறிய ஆட்டோ சட்டென கவிழ்ந்தது. இந்த விபத்தில், ஆட்டோவில் இருந்த பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டார்.

நன்றி: ThanthiTV

தொடர்புடைய செய்தி