"அரசியல் செய்வது யார்?" - மத்திய அமைச்சருக்கு முதல்வர் சரமாரி கேள்வி

77பார்த்தது
"அரசியல் செய்வது யார்?" - மத்திய அமைச்சருக்கு முதல்வர் சரமாரி கேள்வி
‘கல்வியில் அரசியல் செய்யாதீர்கள்' என கூறிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்விகள் எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது, “மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் கல்வித் துறைக்கு தர வேண்டிய நிதி தருவோம் என்று பிளாக் மெயில் செய்வதற்கு பெயர் அரசியல் இல்லையா?. கல்விக்கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை திணிப்பது அரசியல் இல்லையா?. பல மொழிகள் கொண்ட இந்தியாவை ஒரு மொழி நாடாக மாற்றுவது அரசியல் இல்லையா?” என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி