போலீஸ் சீருடை அணிந்த குடிபோதையில் இருந்த ஒருவர், ஒரு பெண்ணை பொது இடத்தில் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. பின்னர் காவல்துறை வெளியிட்ட தகவலின்படி, அந்த நபர் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் என்றும், தாக்கப்பட்ட பெண் அவரது மனைவி என்றும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தின் காஸ்கஞ்சில் நடந்துள்ளது.