குளுகுளுவென இருக்கும் நீரில் குளிப்பது பலருக்கும் பிடித்த விஷயம். இவை மேலை நாடுகளில், 'குளிர் நீர் தெரபி' என்ற பெயரில் பின்பற்றப்படுகிறது. உடற்பயிற்சி, உடல் உழைப்பு காரணமாக ஏற்படும் தசை வலியை சரிசெய்ய குளிர்ந்த நீர் குளியல் பயன்படுகிறது. இதனால் நல்ல உறக்கம், உடலின் வெப்பநிலை குறைதல் ஆகிய நன்மை கிடைக்கும். உறங்கும் 10 நிமிடம் முன் குளிர் நீரில் குளித்தால், ஆழ்ந்த, அமைதியான உறக்கம் கிடைக்கும். நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மன அழுத்தம் கட்டுப்பட்டு, மனத்தெளிவு கிடைக்கும்.