திருவள்ளூர் நகரம் - Thiruvallur City

மாபெரும் மாரத்தான் போட்டி 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

*ஆவடியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் மாரத்தான் போட்டியில் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு* *பெண்கள் வலிமையடைய மாரத்தான் போட்டிகள் அதிகம் பங்கேற்க வேண்டும் என வேண்டுக்கோள்* உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை ரன்னர்ஸ் அம்பத்தூர் அரிமாஸ் சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி ஆவடி அஜய் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 10கிமீ, 5கிமீ என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த் மாரத்தான் போட்டியில் சிறுவர் சிறுமிகள் முதல் முதியவர் வரை சுமார் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆவடி அஜய் விளையாட்டு அரங்கில் துவங்கிய இந்த போட்டி பிரதான சாலை வழியாக எஞ்சின் தொழிற்சாலையை அடைந்து மீண்டும் அஜய் விளையாட்டு அரங்கை வந்தடைந்தது. போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள், பரிசுகளை சிறப்பு அழைப்பாளர்கள் வழங்கி உற்சாகப்படுத்தினர். இதுகுறித்து பேசிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், 4வது ஆண்டாக இந்த் போட்டியை நடத்தி வருவதாகவும், இந்தாண்டில் ஆண்களும் இணைந்து பங்கேற்றுள்ளதாகவும் தெரிவித்தனர். பெண்கள் உடல் வலிமையுடன் இருந்த குடும்பமும் சமூகமும் வலிமையடையும் என்பதற்காக இந்த போட்டி நடைபெற்றது. பெண்கள் உடல் ஆரோகியத்தையும் மன வலிமையும் உறுதிப்படுத்தவும், தைரியத்துடன் செயலப்பட இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். பேட்டி: ஶ்ரீதேவி. நிர்மலா.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా