தெலங்கானா மாநிலம் நரசிம்ஹுலு ரங்காரெட்டி மாவட்டத்தில், அதிக அளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அறுவடை செய்யப்படும் தக்காளிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அதிக அளவில் தக்காளி வரத்து ஏற்பட்டதால் அதன் விலை வெகுவாக குறைந்துள்ளது. 30 கிலோ எடையுள்ள ஒரு பெட்டியை ரூ.100-க்கு மேல் விற்க முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த தக்காளி பழங்களை சாலையோரம் கொட்டி விட்டு சென்றனர்.