ஹோண்டா நிறுவனம் 2025ஆம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட CBR250RR பைக்கை ஜப்பானில் வெளியிட்டுள்ளது . இந்த பைக்கானது தற்போது காஸ்மெடிக் அளவில் மட்டும், புதிய நிறங்களுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தவிர வசதிகள் ரீதியாகவோ, மெக்கானிக்கலாகவோ புதிய பைக்கில் எந்த மாற்றமும் இல்லை என கூறப்படுகிறது. இந்த பைக்கில் 249 சிசி, ட்வின் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது. இந்த பைக் ஜப்பானில், இந்திய மதிப்பில் ரூ.5.19 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.