திருத்தணி - Thiruthani

உற்சாகத்தில் தோகை விரித்தாடிய மயில்

திருத்தணி அருகே தொடர் மழை காரணமாக அதிகாலை நேரங்களில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதற்கிடையே, சீதோஷ்ண மாற்றத்தில் உற்சாகமான ஆண்மயில் தோகை விரித்தாடியது. இதை கிராம மக்கள் வெகுவாக கண்டு ரசித்தனர். திருத்தணி அருகே வெங்கடாபுரம் கிராமத்தில் ஒரு ஆண்மயிலை அப்பகுதி மக்கள் பாதுகாத்து வருகின்றனர். இந்த மயிலும் அக்கம்பக்கத்து வீடுகளுக்கு சுற்றி திரிந்து வருவது வழக்கம். இதற்கிடையே திருத்தணி பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக, குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. அதேபோல், நேற்று காலையும் குளிர்ந்த காற்று வீசியதில், மேகமூட்டத்துடன் சீதோஷ்ண மாற்றத்தை உணர்ந்த ஆண் மயில், திடீரென தோகை விரித்தாடியபடி சுமார் அரைமணி நேரம் அங்குமிங்குமாக வலம்வந்து நடனமாடியது. இந்த அற்புத காட்சியை சிறுவர்-சிறுமிகள் உள்பட பல்வேறு கிராம மக்கள் கண்டு ரசித்தனர். மேலும், அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், அங்கு தோகை விரித்தாடும் மயிலை தங்களின் செல்போன் வீடியோவில் படம்பிடித்து, சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా
నిషేధిత గుట్కాను పట్టుకున్న టాస్క్ ఫోర్స్ పోలీసులు
Jul 19, 2024, 16:07 IST/ఆసిఫాబాద్
ఆసిఫాబాద్

నిషేధిత గుట్కాను పట్టుకున్న టాస్క్ ఫోర్స్ పోలీసులు

Jul 19, 2024, 16:07 IST
ఆసిఫాబాద్ జిల్లా ఎస్పీ డివి శ్రీనివాసరావు ఆదేశాల మేరకు శుక్రవారం జిల్లాలో ప్రభత్వ నిషేధిత గుట్కా అమ్ముతున్నారన్న నమ్మదగిన సమాచారం మేరకు శుక్రవారం జైనూర్ మండలం జంగావ్ గ్రామంలో కిరణ షాప్ లో ప్రభుత్వ నిషేధిత గుట్కా అమ్ముతున్నారని గుర్తించి వాటిని పట్టుకున్నామని టాస్క్ ఫోర్స్ సీఐ రాణా ప్రతాప్ తెలిపారు. ఈ సందర్భంగా మాట్లాడుతూ కిరణ్ షాప్ యజమాని హోర్ మహదేవ్ గోదంలో 29, 120/- గుట్కా పట్టుకొని జైనర్ పోలీసు స్టేషన్ లో అప్పగించినట్లు టాస్క్ ఫోర్స్ సీఐ రాణా ప్రతాప్ తెలియజేశారు.