
மாதவரம்: புழல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் மாதாந்திரக் கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் பெருந்தலைவர் தங்கமணி திருமால் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு துணைப் பெருந்தலைவர் சாந்தி பாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா பெர்னாண்டோ, ராதா விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விளாங்காடுபாக்கம், தீர்த்தம்கிரியம்பட்டு, புள்ளிலைன், வடகரை, கிராண்ட்லைன், சென்றம்பாக்கம், அழிஞ்சிவாக்கம் உள்ளிட்ட 7 ஊராட்சிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்தும், குடிநீர், சாலை, மின்விளக்கு உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றியக் கவுன்சிலர்கள் ப. சிவக்குமார், மல்லிகா மீரான், மேலாளர் அரசு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.