அம்பத்தூர் - Ambattur

ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை நிகழ்ச்சி

புழல் கதிர்வேடு பகுதியில் இயங்கி வரும் நிக்கோலா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 9 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சமுதாயத்தில் நலிவடைந்த மாணவ மாணவிகள் அனைவருக்கும் பல்வேறு இலவச தொழிற் திறன் மேம்பாட்டு பயிற்சியை அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது. இந்த நிலையில் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தரபாண்டியன் தலைமையில் 4வது முறை சாதனையாக ஏசியா புக் ஆப் ரெகார்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்வு நிக்கோலா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெற்றது. இங்கு தொழிற்பயிற்சி பெற்ற 20 இளைஞர்களை தேர்ந்தெடுத்து 10 இருசக்கர வாகனங்களை 10 நிமிடத்தில் தனித்தனியே பிரித்து மற்றும் முழுவதுமாக ஒன்றிணைத்து இயங்க வைக்கும் நிகழ்வு ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் மூத்த தொழில்நுட்ப வல்லுனர் கிருஷ்ணகுமார், வருமானவரித்துறை ஆணையர் நந்தகுமார், புழல் சரக காவல் உதவி ஆணையர் சகாதேவன், பெருநகர சென்னை மாநகராட்சி புழல் கதிர்வேடு 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு, சமூக சேவகர் கதிர்வேடு பாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசினையும், கேடயத்தையும் வழங்கி பாராட்டினர்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా