பாஜக உடன் கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விழி பிதுங்கிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்று (மார்ச்.27) காலை சட்டப்பேரவைக்கு சிரித்துக் கொண்டே வந்த திண்டுக்கல் சீனிவாசன், பாஜக, நம்ம (அதிமுக), அப்பறம் பாமக. “நாங்க கூட்டணிங்க” என சொல்லிவிட்டுச் சென்றார். இந்நிலையில், இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு சரியான பதிலளிக்காமல் அவர் நழுவிச் சென்றார்.