உத்தரப் பிரதேசத்தில் மனைவியை, அவரது கள்ளக்காதலனுக்கு கணவனே திருமணம் செய்துவைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சண்ட் கபீர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த பப்லு, ராதிகா தம்பதிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ராதிகாவுக்கு அதே ஊரைச் சேர்ந்த இளைஞருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பப்லு கள்ளக்காதலை கைவிடுமாறு சொல்லியும் மனைவி அதனை தொடர்ந்திருக்கிறார். பின்னர் மனைவியின் தகாத உறவை ஊர் மக்களிடம் தெரிவித்த பப்லு, மனைவிக்கும், அவரது கள்ளக்காதலனுக்கும் திருமணம் முடித்து வைத்துள்ளார்.