

டேங்கர் லாரி ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புது நகரில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோனஸ் பிரைவேட் லிமிடெட் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலையில் சமையல் எரிவாயு டேங்க் லாரிகள் இயக்கப்படாமல் காலை வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதன் காரணமாக 300க்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு கொண்டு செல்லும் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக சமையல் எரிவாயு கொண்டு செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது செப்டம்பர் 1 2025 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டு வரை மத்திய எண்ணைய் நிறுவனங்களால் போடப்படும் புதிய ஒப்பந்தத்தால் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பாதகம் உள்ளதால் நாமக்கல்லில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து புதிய ஒப்பந்தத்தை கண்டித்து தென்மண்டல எல்பிஜி புல்லட் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்ததால் இன்று தமிழகம் முழுவதும் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் சமையல் எரிவாயு ஏற்றிக்கொண்டு செல்வதும் இறக்கி வைக்கும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக தமிழகம் ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.