மழையில் நனைந்து வீணாகும் கம்பிகள்: சுத்திகரிப்பு நிலையம்

79பார்த்தது
திருவள்ளூர் பெரியகுப்பம் தேவி மீனாட்சி நகர் பகுதியில் தற்போது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இருந்து பராமரிப்பு இல்லாமல் கழிவுநீர் அனைத்தும் சுத்திகரிக்காமல் வெளியே அனுப்பி திருவள்ளூர் பகுதியில் செல்லும் கூவம் ஆற்றின் வழியாக விடுகின்றன தற்போது பல கோடி ரூபாய் செலவில் புதிய சுத்திகரிப்பு நிலையம் கட்டு வருகின்றனர், அதில் அனைத்து கம்பிகளும் துருப்பிடித்து துருக்கள் கீழே கொட்டும் அளவில் தரமற்ற கம்பிகளை வைத்து கான்கிரீட் அமைக்கின்றனர் இதனால் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கூடிய விரைவில் கான்க்ரீட் விரிசல் விட்டு உடையும் நிலை உள்ளது இதனால் இப்பகுதி முழுவதும் மிகுந்த பாதிப்பு ஏற்படும் எனவே தரமான கம்பி சிமெண்ட் கிளை வைத்து கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க அரசாங்கம் ஒப்பந்ததாரருக்கு வலியுறுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி